மது போதையில் போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு நடத்துனருடன் வாக்குவாதம்! வீடியோ
ராசிபுரத்தில் அரசு பேருந்தில் செல்லாத இடத்திற்கு டிக்கெட் கேட்டு நடத்துனருடன் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காரவள்ளியை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மது போதையில் பேருந்தில் ஏறிய ஒருவர், பேருந்து செல்லாத இடத்திற்கு நடத்துனரிடம் பயண சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
image
இந்நிலையில், வாக்குவாதம் முற்றவே மது போதையில் இருந்தவர் கண்மூடித்தனமாக நடத்துனரை தாக்கியுள்ளார். இதையடுத்து கீழே இறங்கிய நடத்துனரும் மது போதையில் இருந்தவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போதையில் இருந்தவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இராசிபுரம்:#போகாதஊருக்கு டிக்கெட் கேட்டு அரசு நடத்துனரை தாக்கிய #மதுபிரியர். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல்.*@sivasankar1ss @kalilulla_it @Musthak_MI @Journalist_guna @rameshibn @Stalin__SP @The_Abinesh @rajakumaari pic.twitter.com/hXWna0HAri
— Nowshath A (@Nousa_journo) October 13, 2022
Leave a Comment
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.