மலேஷியா செல்வதற்குக் காத்திருப்பவர்களுக்கான அறிவித்தல்

சுற்றுலா விசாவில் மலேஷியாவிற்கு தொழில் வாய்ப்புக்காக செல்ல முடியாது என்றும் ,அவ்வாறான மோசடிக்காரர்கள் பற்றிய தகவல் கிடைத்தால் அது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவிற்கு அறியத்தருமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மலேஷியாவில் தொழிலைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சிலர், தொழில் தேடும் நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொள்வதுடன், சுற்றுலா விசாவில் அதிகமானவர்கள் தொழிலுக்காகச் செல்வதாகப் பணியத்திற்குத் தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் அவ்வாறு செல்பவர்கள் மலேஷியாவினுள் நுழைந்த பின்னர், ஏதேனும் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக விசாவை மாற்றிக் கொள்ள முடியாது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

இவ்வாறான மோசடிகள் பற்றி தகவல் கிடைத்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் 011 286 4241 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0112 684 118 எனும் தொலைநகல் இலக்கத்திற்கு அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   எனும் மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் தருமாறு பணியகம் மேலும் அறிவித்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.