மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் இறங்கவும், குளிக்கவும் வேண்டாம் என்று எச்சரிக்கப்படுள்ளது.
சமீபத்தில் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 6 நபர்கள் திடீரென்று நீர் திறக்கப்பட்டு அதிகப்படியாக வந்ததால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேர் அதிர்ச்சியை கொடுத்தது. அதுவும் இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பின் தான் அனைவரது உடலுமே கண்டெடுக்கப்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்று தான் கூற வேண்டும்.

இத்தகைய சூழலில் மேட்டூர் அணையில் இருந்து தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளதால் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு இரண்டு தினங்களில் தண்ணீர் வரவுள்ளது.
எனவே, கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, குளிப்பதற்கோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ ஆற்றில் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.