
இந்திய போக்குவரத்து இணைப்பில் முன்னணி துறையாக ரயில்வே செயல்பட்டு வருகிறது. இதில் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் ரயில்வே துறையை நாள்தோறும் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பண்டிகை தினங்களையொட்டி, ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து 78 நாட்கள் ஊதியத்தொகையை ரயில்வே ஊழியர்களுக்கு போனஸாக அறிவித்து வருகிறது. இதன் அடிப்படையில் 12வது ஆண்டாக இந்த ஆண்டும் 78 நாட்கள் ஊதியத் தொகையை தீபாவளி போனஸாக அறிவித்துள்ளது.
ஒன்றிய அமைச்சரவை கூட்டத்துக்கு பின் பேசிய் அமைச்சர் அனுராக் தாக்கூர், குறைந்தபட்ச ஊதியம் பெறும் ஒரு ரயில்வே ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ.17,951 போனஸாக கிடைக்கும். மத்திய அரசின் இத்தகைய அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 11.27 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு மொத்த போனஸ் ரூ.1,832 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்தள்ளார்.