புதுவிதமாக 11 பேனாக்கள் மீது பொடிப்பொடியாக தேர்வுக்கு விடைகளை எழுதிச் சென்ற மாணவன் குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டில் மலகா சட்ட பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் தேர்வின் போது முழு பாடத்தையும் 11 பேனாக்களின் மேல் சுருக்கமாக எழுதிச் சென்று காப்பியடித்துள்ளார்.
முதலில் பேராசிரியருக்கு இவர் மீது சந்தேகம் வரவில்லை. அதிகமான பேனாக்களை மேசை மீது வைத்திருந்ததால் பேராசிரியர் அதை உற்று நோக்கியபோதுதான் அதன் மேல் எழுத்துக்கள் இருந்தை கண்டுபிடித்தார்.
இதையடுத்து தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி மாணவரை கைது செய்தனர். லூசி என்ற பேராசிரியர் இந்த சம்பவத்தைப் புகைப்படத்துடன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் இது மாணவரின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரின் பதிவைப் பார்த்த பலரும் மாணவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in