உக்ரைன் போரில் ரகசியமாக நுழைந்த ஈரானிய துருப்புகள்: புடினின் பயங்கர சதித்திட்டம்


ரஷ்ய படைகளுக்கு பயிற்சி அளிக்க 50 இஸ்லாமிய புரட்சிகர காவல் படை களமிறக்கம்.


ஷாஹெட்-136 ட்ரோன்களுடன் உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிக்கு அனுப்பி வைப்பு.

போரில் ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக எலைட் ஈரானிய துருப்புகள் குழு உக்ரைனின் முன்வரிசைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

உக்ரைன் ரஷ்யா போர் தற்போது கிழக்கு பகுதி நகரங்களில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காமிகேஸ்(Kamikaze) ட்ரோன்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்த ரஷ்ய வீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக எலைட் ஈரானிய துருப்புகள் உக்ரைனின் முன்வரிசைக்குள் ரகசியமாக நுழைந்து இருப்பதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போரில் ரகசியமாக நுழைந்த ஈரானிய துருப்புகள்: புடினின் பயங்கர சதித்திட்டம் | Elite Iranian Troops Secretly Enter Ukraine WarImage: AFP via Getty Images

இதற்காக 50 இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வல்லுநர்கள் பணியில் இறங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் உக்ரேனிய நகரங்களைத் தாக்கும் நூற்றுக்கணக்கான ஷாஹெட்-136 ட்ரோன்களுடன் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர், இதன் முலம் உக்ரைனில் திடீர் வெடிப்புகளை நடத்த புடின் திட்டமிட்டுள்ளார்

இதற்கிடையில் எலைட் ஈரானிய துருப்புகள் விமான பாதையை கட்டுப்படுத்தியதாகவும், அவை  ஷாஹெட்-136 ட்ரோன் குழுக்களால் குறி வைக்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரில் ரகசியமாக நுழைந்த ஈரானிய துருப்புகள்: புடினின் பயங்கர சதித்திட்டம் | Elite Iranian Troops Secretly Enter Ukraine War

கூடுதல் செய்திகளுக்கு: ஹரி மற்றும் மேகன் மார்க்கல் பிள்ளைகள் பட்டங்களை பெறுவார்களா? மன்னர் சார்லஸிடம் இளவரசர் கோரிக்கை

ஜனாதிபதி புடினின் மிருகத்தனமான இயந்திர தாக்குதல் தோல்வியடைந்து ஏவுகணைகள் தீர்ந்துவிட்டதாக ரஷ்யாவின் கவலைகளுக்கு மத்தியில் இந்த ஈரானிய படைகளின் வருகை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.