கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர்.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள சிச்சுருகானப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காரில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கன்பத்(23) என்பதும், மைசூரில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து குடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ளான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கன்பத்தை கைது செய்தனர்.