
‛ஜெய்பீம்' பட இயக்குனரின் அடுத்த படமும் ஓடிடி-க்கா
தமிழகமெங்கும் புகழ்பெற்ற ஓட்டல் சரவண பவன். ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சிக்கி அதற்காக சிறை தண்டனையும் அனுபவித்தார். இவரது வாழ்க்கை சினிமாவாக தயாரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். இதை ஓடிடி தளத்தில் வெளியிடும் விதமாக உருவாக்குவதாக கூறப்படுகிறதும். படத்திற்கு 'தோசா கிங்' என்று பெயரிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கதையோடு தொடர்புடைய ஜீவஜோதியின் ஒப்புதல் பெறப்பட்டு விட்டதாக தெரிகிறது.
நிச்சயமாக அண்ணாச்சியின் குடும்பம் ஒப்புதல் அளிக்காது என்றாலும் ஜீவஜோதியின் பார்வையில் இருந்து படத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு பெரும் தொகை ஜீவஜோதிக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளிவரும் என்று தெரிகிறது.
ஏற்கனவே சூர்யாவை வைத்து ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.