துப்பாக்கி ரவை பாய்ந்து புல் செதுக்கியவர்கள் இருவர் காயம்.. குறி தவறியதால் விபரீதம்..!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி விமான ஒடுபாதையில் புல் செதுக்கிக்கொண்டிருந்த இருவர் துப்பாக்கி ரவை பாய்ந்து காயமடைந்தனர்.

சம்பவத்தன்று மதியம் இங்கு ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் செல்வி மற்றும் சங்கர் ஆகியோர் புல் செதுக்கி கொண்டிருந்தனர். அப்போது ஐஎன்எஸ் வீரர்கள், பறவைகளை விரட்ட BORE GUN -ல் சுட்ட போது, குறி தவறி துப்பாக்கி ரவை இவர்கள் மீது பாய்ந்ததாக கூறப்படுகின்றது.

காயமடைந்த இருவருக்கும் முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.