தேவர் ஜெயந்தி -தங்கக்கவசத்தை எடுத்துகொடுக்க வருமாறு எடப்பாடி பழனிசாமி சார்பில் அழைப்பு கடிதம்..!

ராமநாதபுரம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் ஜெயந்திக்காக, தங்கக்கவசத்தை எடுத்து கொடுக்க வருமாறு, தேவர் நினைவிட பொறுப்பாளரிடம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சார்பாக, முன்னாள் அமைச்சர்கள் இன்று நேரில் அழைப்பு விடுத்தனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் இன்று, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ். மணியன், காமராஜ், செல்லூர் ராஜு உள்ளிட்டோர், முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

இதன்பின்னர், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனை நேரில் சந்தித்த அவர்கள், தேவர் ஜெயந்திக்கு தங்கக்கவசத்தை எடுத்துக் கொடுக்க வருமாறு, எடப்பாடி பழனிசாமி சார்பில் அழைப்பு கடிதத்தை அளித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.