நோட்டோவுடனான நேரடி மோதல்…இதற்கு தான் வழிவகுக்கும்: ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை


அணிதிரட்டல் இன்னும் இரண்டு வாரங்களில் முடிந்துவிடும் புடின் அறிவிப்பு.

நோட்டோவுடனான நேரடி மோதல் உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் புடின் எச்சரிக்கை.

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

கசாக் தலைநகர் அஸ்தானாவில் பரந்த அளவிலான உரையில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் ராணுவ அணிதிரட்டல் இன்னும் இரண்டு வாரங்களில் முடிந்துவிடும் என்று தெரிவித்தார்.

அப்போது நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாயை பற்றி பேசிய ஜனாதிபதி புடின், நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாயின் சேதமடையாத பாதை ஒன்றை குறித்து ஜேர்மனி இன்னும் முடிவு எடுக்கவில்லை, இதன் மூலம் ரஷ்யா ஜேர்மனிக்கு எரிவாயுவை செலுத்த முடியும் என தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி தனது தேசிய நலனை காட்டிலும் நோட்டோவுடான விசுவாசத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தவறு செய்கிறது எனவும் எச்சரித்தார்.

அத்துடன் ரஷ்யாவுடன் நோட்டோவின் எந்தவொரு நேரடி மோதலும் உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் எனவும் புடின் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் யோசனைக்கு திறந்திருப்பதாக தெரிவித்த புடின், நாங்கள் எப்போதும் இதை சொல்லியே வருகிறோம் எனவும், உக்ரைன் பேச்சுக்கு தயாராக இருந்தால், மத்தியஸ்த முயற்சிகள் தேவைப்படும் என்றும் அறிவித்தார்.

நோட்டோவுடனான நேரடி மோதல்…இதற்கு தான் வழிவகுக்கும்: ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை | Putin Clash With Nato Trigger Global Catastrophesky news

சுதந்திர செய்தி தளமான மெடுசாவின் கூற்றுப்படி, ஜனாதிபதி புடின் போர் நிறுத்த விவாதங்களில் பங்கேற்க தயாராக இருக்கிறார், மேலும் கெர்சன் பகுதியில் இருந்து தனது படைகளை கூட திரும்பப் பெறலாம் என தெரியவந்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: “நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேன்” புதிய நிதியமைச்சரை அறிவித்த பின் பிரதமர் லிஸ் ட்ரஸ் பேச்சு!

அத்துடன் இன்று பிற்பகலில் செய்தியாளர்கள் கூட்டத்தில், கடந்த மாதம் உஸ்பெகிஸ்தானில் நடந்த உச்சிமாநாட்டில் இந்தியாவும் சீனாவும் உக்ரைனில் “அமைதியான பேச்சுவார்த்தைக்கு” ஆதரவளித்ததாகவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.