சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக செயல்படும் நிலையில், வங்கி நிர்வாகம் கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் ரூ. 3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை ஜெயலலிதா வழங்கியிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜையின் போது அதிமுக பொருளாளராக இருந்த ஓபிஎஸ் வங்கியில் தங்க கவசத்தை பெற்று நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பார்.