பெரியாறு நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக நாளை முதல் 200 கனஅடி வீதம் புலிப்பட்டி மதகிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை

சென்னை: பெரியாறு நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக 346 மி.க.அடி நீரினை வைகை அணையிலிருந்து 20 நாட்களுக்கு, நாளொன்றுக்கு 200 கஅடி/விநாடி வீதம்,15.10.2022 முதல் புலிப்பட்டி மதகிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.   
                                               
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக  சாகுபடி  மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து 15.10.2022 முதல் 15.03.2023 வரை, முதல் 62 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதமும், அடுத்த 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கனஅடி வீதமும், கடைசி 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கனஅடி வீதமும்  தண்ணீர்  ‌திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில்  2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
                                               
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமத்தில் மஞ்சளாறு  அணையிலிருந்து 15.10.2022 முதல் 152 நாட்களுக்கு முதல் போகத்திற்கு தண்ணீர்  திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு 3386 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு 1873 ஏக்கர் ஆக மொத்தம் 5259 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஐந்து  வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு 16.10.2022 முதல் 15.04.2023 முடிய தொடர்ந்து 182 நாட்களுக்கு ஆழியாறு அணையிலிருந்து 1235 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனை மலை வட்டத்திலுள்ள  6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்ற வகையில் அரசு ஆணையிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.