மதுரை மாவட்டத்தில் திருமணத்தில் விருப்பமில்லாததால் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அனுப்பானடி பாக்கியா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா. இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் திருமணத்தில் கார்த்திகா விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இருப்பினும் கார்த்திகாவிற்கு பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்துனர்.
இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த கார்த்திகா தற்கொலை செய்து கொள்வதற்காக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதில் கார்த்திகா பரிதாபமாக உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தெப்பக்குளம் போலீசார், கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.