ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லையாம்… ஒரே போடாய் போட்ட சீமான்!

குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்த கூட்டத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் கட்சி ஒருங்கிணைப்பாளர்

கட்சியனரோடு மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தார். இதனையடுத்து மேடையில் அவர் ஆற்றிய உரை: :

குடிவாரி கணக்கெடுப்பு தான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி.குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூக நீதி குறித்து பேசக்கூடாது, தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.

நாடு முன்னேறுகிறது என மோடி பேசும் பொய்யைவிட திமுகவினர் பேசும் சமூகநீதி என்பது பெரிய பொய், ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என கூறும் அண்ணாமலை, மோடி 8 ஆண்டாக எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஈடு இணையற்ற இசைஞானி இளையராஜா தலித் என்பதற்காக அவருக்கு எம்பி பதவி கொடுத்துள்ளனர். இதனை இளையராஜா தூக்கி எறிந்திருக்க வேண்டும்.

மத்திய அரசு நீட்தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்துவிட்டது. அவரவர் தாய் மொழியில் பேசுகின்றனர்; நாம் மொழிகளுக்கே தாயான தமிழ் மொழியில் பேசுகிறோம். இந்த நாட்டு இளைஞர்களை போதை மாத்திரைகளுக்கும், மதுபோதைக்கும் அடிமையாக வைத்துவிட்டனர்.

அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டுட்டு வந்துட்டாரு அண்ணாமலை. இரண்டு வருடத்தில் அண்ணாமலையை பாஜகவினர் விரட்டிவிடுவார்கள் அண்ணாமலையிடம் தயவுசெய்து கேட்கிறேன் ஹெச்ராஜாவிற்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி வாங்கி குடுத்துருங்க. காரைக்குடியில் ஒரு ஆளுநர் என இட ஒதுக்கீடு வழங்க ஹெச் ராஜாவிற்கு நான் சிபாரிசு செய்கிறேன்.

ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை; இந்து மதமும் இல்லை. வரலாற்றில் ராஜராஜ சோழன் சைவ மரபினர் என்றே உள்ளது, வீர சைவரான எங்களை ஏன் இந்து என மதம் மாற்றுகிறீர்கள்? என்று சீமான் கேள்வியெழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.