வெளிநாட்டிலிருந்து தங்க நகை அணிந்து இலங்கை வருவோருக்கு அவசர அறிவுறுத்தல்


தங்க நகைகளுடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடத்தல் நோக்கத்துடன் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டிலிருந்து தங்க நகை அணிந்து இலங்கை வருவோருக்கு அவசர அறிவுறுத்தல் | Advice For Coming To Sri Lanka With Gold Jewelry

நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதால் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரி வருமான இழப்பு ஏற்படுகிறது.

இந்த கடத்தல்காரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உடனடி சட்ட நடவடிக்கை

அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

வெளிநாட்டிலிருந்து தங்க நகை அணிந்து இலங்கை வருவோருக்கு அவசர அறிவுறுத்தல் | Advice For Coming To Sri Lanka With Gold Jewelry

எவ்வாறாயினும், இதனால் சாதாரண பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.