அமெரிக்கா செல்ல 1 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களுக்கு பணி விசா

அமெரிக்கா செல்ல விண்ணப்பித்து காத்திருக்கும் பல லட்சம் இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், ஒரு லட்சம் H&L பணி விசாக்களை இந்தியாவின் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

அண்மையில் இந்தியா வந்த வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் தலைமையிலான அமெரிக்கக் குழுவினருடன் பேச்சுநடத்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தொழில் ரீதியான விசாக்களுக்கான காத்திருப்பு காலம் மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் நீள்வதாக குறிப்பிட்டார்.

2022 ஜனவரி முதல் 9 மாதங்களில் சுமார் ஒரு லட்சம் 60 ஆயிரம் விசாக்கள் பரிசீலிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு தொழில் ரீதியான விசா வழங்கப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.