இணைய வழி கற்றல் தொகுப்புகள் பதிவேற்றம்| Dinamalar

புதுச்சேரியில் மாணவர்களுக்கான இணையவழி கற்றல் தொகுப்புகள் மாநிலப் பயிற்சி மையத்தின் வலைப்பூவில் பதிவேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரியில் இணையவழி கற்றல் தளத்தை உருவாக்கும் முயற்சியில் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனமும், மாநில பயிற்சி மையமும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கற்கும் பாடத்தினை எளிய முறையிலும், உற்சாகமூட்டும் விளையாட்டு வழியிலும் கற்பதற்கான வெவ்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய இணைய வழி கற்றல் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைய வழி கற்றல் தொகுப்புகள் நிலப் பயிற்சி மையத்தின் வலைப்பூவில் (statetrainingcentre. blogspot.com) பதிவேற்றிப் பள்ளிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சிவராம ரெட்டி தலைமை தாங்கினார்.

சமகிர சிக் ஷாவின் மாநில திட்ட இயக்குநர் தினகரன் ஐ.இ.சி., தொகுப்பினை மாநில பயிற்சி மையத்தின் வலைப்பூவில் அர்ப்பணித்தார். இதன் மூலம் புதுச்சேரி மட்டுமல்லாது நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., வழியில் பயிலும் எந்த மாணவரும், ஆசிரியரும், பெற்றோரும் இவ்வலைப்பூவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது மாணவர்கள் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில், மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய நிகழ்நிலை பயிற்சித் தாள்கள், இன்டர்ராக்டிவ் கேம்ஸ், பதிவிறக்கம் செய்யத்தக்க பயிற்சித்தாள்கள் உள்ளிட்ட கற்றல் கருவிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியை பொறுப்பாளர் ராஜ்குமார் ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை நுாலகர் தணிகைமணி, விரிவுரையாளர்கள் விக்டோரியா சாந்தி, பூரணி மற்றும் முத்துலட்சுமி செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.