ராமநாதபுரம் :”அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி”அதாவது ‘வறியவரின் கடும்பசியை தீர்க்க வேண்டும்,அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளை தனக்கு பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்’, என திருவள்ளுவர்கூறியுள்ளார். இதன்படி,
பட்டினியில்லா சமுதாயம் உருவாக, வீணாக்கும் உணவை சேமித்து, ஏழைகளுக்கு வழங்கி சேவை செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.
இன்று உலக உணவு தினம்
1945ம் ஆண்டு அக்.16ல் ஐக்கிய நாடுகள்சபைகளின் துணை அமைப்பான உணவு, வேளாண் நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நாளில் 1979 முதல் உலக உணவு தினம் கொண்
டாடப்படுகிறது. ‘யாரும் பசியால் வாடக்கூடாது’ நமது எதிர்காலம், செயல்பாடு, ஆரோக்கிய உணவு, பட்டினில்லா சமுதாயமாகும். உலக மக்கள் அனை
வருக்கும் சுகாதாரமான, சத்தானஉணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கோ.விஜயகுமார் கூறியதாவது:சுகாதாரமான, சத்தான உணவுதன் சுத்தம், சுற்றுப்புறம், சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவை நன்றாகவேகவைத்து சமைக்க வேண்டும். அதனை அதிகநேர இடைவெளியின்றி
சாப்பிட வேண்டும். சூடவைத்த நீரை அருந்த வேண்டும். சமையல் பொருட்கள் தரமாகவும், காய்கறி, பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். சராசரி 60 கிலோ எடை உடைய மனிதர்கள் அருந்தவேண்டியது 1800–2000 கலோரிகள்
வரை மட்டுமே, இதில் மாவுச்சத்து 40–50 சதவீதம், கொழுப்பு, புரதம் 15–20, வைட்டமின்கள் 20, காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் சேர்க்க வேண்டும்.
குறைக்கப்பட வேண்டிய உணவுகள்
எண்ணெயில் பொரிக்கப்பட்டவைகள், சர்க்கரை, உப்பு மிகுதியான உணவுகளை அதிகமாக சாப்பிட கூடாது. குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு ஆகியவற்றை தவிர்க்கலாம்.
பசியை போக்குதல்
இன்றைய நிலையில் உலகஅளவில் 82கோடி பேர் தினமும்பசியால் வாடுகின்றனர். 21 சதவீதம் இந்திய குழந்தைகள் சாரசரி எடையை விட குறைவாக உள்ளனர். சாலையோரங்களில் வசிப்பார்கள் 3வேளை உணவு கிடைக்காமல் பசியால் வாடுகின்றனர். மறுபுறம் பண்டிகை, விருந்து இவற்றில் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு ‘உணவை சேமித்து சேவை செய்’ என்ற திட்டத்தை உணவுபாதுகப்பு துறை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சமைக்கப்பட்ட நல்ல நிலையில்
மிகுதியாகும் உணவை இல்லாதவர்களுக்கு அளிப்பதற்கு மாவட்டந்தோறும் உணவு பாதுகாப்பு துறையால் அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு மிகுதியானால் 98421 40879 என்ற அலைபேசி
எண்ணில் தெரிவிக்கலாம். அந்த உணவு பசியால் வாடும் நபர்களுக்கு கொண்டு சேர்க்கப்படும்,’.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement