குழந்தை பிறந்ததும், அனைத்து மாநிலங்களிலும் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்…

டெல்லி: நாடு முழுவதும்  குழந்தை பிறந்ததும், பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உதய் தெரிவித்து உள்ளது.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அன்படி ஒவ்வொருவருக்கும் ஒரு 12 இலக்க எண் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண் மூலம் ஒருவரின் முகவரி உள்பட பயோமெட்ரிக் தகவல்கள் பெற முடியும்.  ஆதார் எண் என்பது ஒவ்வொருவரின்  12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். இந்த ஆதார் எண்ணை இனிமேல் குழந்தை பிறந்தவுடன் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழுடன் வழங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது குழந்தைக்கு 5 வயதாகும் போது கைரேகைகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் சேர்க்கப்படுகிறது. பின்னர் குழந்தைக்கு 15 வயது ஆகும்போது பயோமெட்ரிக் விபரங்கள் அப்டேட் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும்   பிறப்பு சான்றுகளுடன் ஆதார் எண் சேர்த்து வழங்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தட உள்ளது. தற்போது சில மாநிலங்களில் இந்த நடைமுறை உள்ள நிலையில், விரைவில், அனைத்து மாநிலங்களிலும் இந்த வடிக்கையை அமல்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை யுடிஏ (UDAI) மேற்கொண்டு வருகிறது.

மேலும், ஏற்கனவே ஆதார் வைத்திருப்பவர்கள் புதிய முகவரிக்கு மாற்றி இருப்பதாலும், தங்கள் மொபைல் எண்ணை மாற்றி இருப்பதாலும், தங்கள் விபரங்களை தானாக முன் வந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த புதுப்பிப்பை ஆன்லைனில் எம்–ஆதார் செயலி மூலமாக அல்லது ஆதார் மையங்களில் ரூ.50 செலவில் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.