சிறுநீரகம் முதல் இதயப் பிரச்னை வரை தவிர்க்க, ரத்த ஓட்டம் சீராக்கும் உணவுகள்! #VisualStory

Blood vessels

நம் உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆற்றல் ரத்தம் மூலமாகக் கிடைக்கிறது. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் ரத்தம் சரியாக வழங்காதபோது, உடலில் பிரச்னை தொடங்குகிறது.  

Human body

ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற தீவிர பிரச்னைகள் ஏற்படலாம். அவற்றை தவிர்க்க, ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

சில நல்ல உணவுகளை உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற சில வழிமுறைகளைப் பின்பற்றினால், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

கிரீன் டீ

கிரீன் டீ: இதில் ப்ளேவனாய்டு, பாலிபீனால்ஸ் மற்றும் கேட்டச்சின் போன்றவை உள்ளன. இவை ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டம் சீராக ஓட உதவும். தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பூண்டு

பூண்டு: பூண்டை `ரத்தத்தைச் சுத்திகரிக்கக்கூடிய டானிக்’ என்றே சொல்லலாம்.  இதைச் சமையலில் சேர்த்துக்கொண்டால், உணவுக்கு நறுமணத்தையும் சுவையையும் கூட்டும். அதோடு, கூடுதல் பலனாக ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.

கீரைகள்,

இரும்புச்சத்துள்ள உணவுகள்: இரும்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.  உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். தானியங்கள், கீரைகள், பருப்புகள், இறைச்சி (Red Meat), கிட்னி பீன்ஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச்  சேர்த்துக்கொள்வது நல்லது.

மிளகு

மிளகு: உணவுப் பொருள்களில் காரச் சுவைக்குச் சேர்க்கப்படும் மிளகு, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கக்கூடியது. இதை அன்றாடம் ஏதேனும் ஓர் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால், ரத்த நாளங்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் உடல் முழுவதற்கும் செல்லும்.

தக்காளி

தக்காளி: உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, லைகோபைன் நிறைந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள ‘லைகோபைன்’ ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். 

முந்திரி

நட்ஸ்: பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றில் வைட்டமின் பி3  என்னும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சத்துகள் நிறைவாக உள்ளன. 

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் எனப் பல ஆய்வுகள் சொல்கின்றன. 

மது

புகை, மது வேண்டாம்: புகைப்பிடிக்கும்போது சிகரெட்டின் புகையிலையில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, ரத்த அழுத்தை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை பாதிக்கும். மது குடிப்பது தமனிகள் கடினமாவதற்கு வழிவகுக்கும். ரத்த ஓட்டம் தடைப்பட்டு ரத்த அழுத்தம் ஏற்பட வழி வகுக்கும்.

சைக்கிளிங், ரன்னிங், வாக்கிங், எக்சர்சைஸ் போன்ற ஏதாவது ஓர் உடற்பயிற்சியைச் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.