திருப்பத்தூரில் 2பெண்கள் உள்பட 4 போலி மருத்துவர்கள் கைது..!

திருப்பத்தூரில் 2 பெண்கள் உள்பட 4 போலி மருத்துவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆரிப் நகரைச் சேர்ந்த அப்துல்லா,  அங்கநாதவலசைச் சேர்ந்த வேலாயுதம், சுண்ணாம்புகாளைச் சேர்ந்த உமாசரஸ்வதி மற்றும் சென்னம்மாள் ஆகிய 4 பேரும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு தங்களுடைய பகுதிகளில் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அவர்களின் இடங்களுக்கு சென்று சோதனை மேற்கொண்ட போலீசார் மருந்து மாத்திரைகள் மற்றும் சிரிஞ்சுகளை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவர்கள் 4பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.