சென்னை,
61-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் இன்று (சனிக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக தடகள அணியை, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார். அணியில் 35 வீரர்கள், 26 வீராங்கனைகள் என மொத்தம் 61 பேர் இடம் பிடித்துள்ளனர். தமிழக அணி வருமாறு:-
ஆண்கள் அணி: கதிரவன், தமிழ் அரசு, ராகுல் குமார், அவினாஷ், ஷரண் சங்கர், மாரியப்பன், தினேஷ், லோகநாதன், ராஜ்குமார், மணிகண்டன், கிருபாகரன், வேணுகோபால், கணபதி, செல்வின், நிஷாந்த் ராஜா, பிரேம்குமார், சுரேந்தர், புவனா கார்த்திக், அசத்துல்லா முஜாஹித், சன்மத் தர்ஷன், அரவிந்த், வினித், விமல் முகேஷ், முகமது சலாலுதீன், ஞான சோனி, தீனா, சந்தோஷ், நிர்மல், பிரேவ்மன் ஹார்ட், மதீஸ்வரன், அராபத், ஸ்டாலின் ஜோஸ், ஸ்ரீது, நவீன்குமார்.
பெண்கள் அணி: கிரி தரிணி, அர்ச்சனா, சுபா, ஒலிம்பா ஸ்டெபி, ரோஷிணி, கவிதா, சவுந்தர்யா, நீலாம்பாரி, ஆகான்சா கீர்த்திகா, கீதாஞ்சலி, மோகவி, கே.நந்தினி, திவ்யா, சுமத்ரா, ஷோபனாதேவி, ஷெரின், கெவினா அஸ்வின், வர்ஷா, கொலிஷியா, ஆஷா இளங்கோ, ரோசி மீனா, பாலநிஷா, வினோதினி, நித்யா, வி.நந்தினி, தீபிகா.