பாளை சிறையில் கைதியிடம் செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்

நெல்லை:  பாளை. மத்திய சிறையில் நடந்த திடீர் சோதனையில் ஆயுள் தண்டனை கைதியிடம் செல்போன் மற்றும் சிம்காடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பாளை. மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 1000 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அடிக்கடி போலீசார் சோதனை நடத்துவது வழக்கம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த செல்வம் என்ற பிரம்மா செல்வம் என்பவர் ஆயுள் தண்டனை கைதியாக பாளை. சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது அறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருப் பதாக தகவல் கிடைத்த தால், சிறைத் துறையினர் நேறறு சோதனை நடத்தினர். அப்போது அங்கு செல்போன் மற்றும் சிம்கார்டுகள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.