புதுக்கோட்டையில் 3 நாட்களாக நீடித்து வந்த வருமான வரிசோதனை முடிவு.. பெட்டி, பெட்டியாக பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பெட்டி, பெட்டியாக பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

புதுக்கோட்டை பெரியார் நகரில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் கடந்த 3 நாட்களாக வருமான வரி துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சோதனை முடிவடைந்ததை அடுத்து அங்கிருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் ஆகியவை பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு பெரிய வாகனத்தில் ஏற்றப்பட்டு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.