ரூ.70லட்சம் பணம் கேட்டு ஓட்டல் அதிபரை கடத்திய 2 ரவுடிகள் கைது..!

சேலத்தில் 70 லட்சரூபாய் பணம் கேட்டு ஓட்டல் அதிபரை கடத்திய 2பேர் கைது செய்யப்பட்டனர்.

சூரமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சரண்யா என்பவரிடம் வாங்கிய 24லட்சம் ரூபாய் கடனுக்காக , அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து 96லட்சம் ரூபாய் வரை கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேலும் 70லட்சம் ரூபாய் பணம்கேட்டு சுப்பிரமணியனை சரண்யா மிரட்டியுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே 8பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து சுப்பிரமணியனை காரில் கடத்திச் சென்றது.

அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்போன் சிக்னல் மூலம் சுப்பிரமணியன் இருக்கும் இடத்தை கண்டறிந்து மீட்டனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் 6பேரை தேடி வருகின்றனர்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.