வேலூர்: மகன் மரணமடைந்த செய்தி கேட்டு தாயும் உயிரிழந்த சோகம்

பேர்ணாம்பட்டு அருகே மகன் உயிரிழந்த செய்தி கேட்டு தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ராம்பாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பீடி சுற்றும் தொழிலாளி சிகாமணி (50). இவரது தாயார் பெரிய தாயி (68) 100 நாள் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் அதே பகுதியில் அருகருகே வசித்து வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட வந்துள்ளார் சிகாமணி. இவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் காலை வழக்கம் போல் 100 நாள் வேலைக்குச் சென்ற பெரிய தாயிடம் அவரது மகன் சிகாமணி உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
image
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெரிய தாயி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிலிருந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெரிய தாயி, சிகாமணி ஆகியோரின் உடலை ஒரே இடத்தில் அஞ்சலிக்காக வைத்து பின்னர் அடக்கம் செய்தனர். தாய் மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.