15/10/2022; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கொரோனா பாதிப்பு….!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவிலும் தினசரி பாதிப்பு 2ஆயிரம் முதல் 3ஆயிரத்திற்குள்ளாக உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது.

நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக மேலும்,  2,430 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் 26,618 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,874 பேர் ஆக உள்ளது.

அதுபோல இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,70,935 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,19,27,15,971 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 5,82,727  டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.