அடேங்கப்பா! பிக் பாஸ் குரலின் சொந்தக்காரரின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கன்டென்டுக்கும், ரணகளத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அவர்களை பிக்பாஸ் டீம் குறிவைத்து தூக்கியதற்கு மிக முக்கிய காரணம். இந்நிலையில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள பிக்பாஸ் ரசிகர்களும் ஆர்வமாக இருந்தனர். அதன்படி இந்த போட்டியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் இந்த நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் முதல் வாரமே நான்கு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. மேலும் வீட்டில் உள்ள போட்டியாளர்களை நான்கு அணிகளாக பிரித்து வேலைகள் பிரித்து செய்து வந்தனர். இதனால் போட்டியாளர்களுக்குள் சலசலப்பு தொடங்கி இருக்கிறது.

இதற்கிடையில் கடந்த முதல் சீசன் ஆரம்பித்ததிலிருந்தே பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் குறித்த கேள்வி அனைவரும் மனதிலிமே எழுந்தது. அதன்படி இதில் வரும் கம்பீர குரலுக்கான சொந்தகாரரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் அந்த கம்பீரக்கூறல் கொடுப்பவரின் பெயர் சதீஷ் சாரதி சச்சிதானந்தம் (சாஷோ) எனவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவருக்கு ஒரு நாளைக்கு இருபதாயிரம் வழங்கப்படுவதாகவும் இவர் மொத்தமாக ஒரு மாதத்திற்கு ஆறு லட்சம் வரைக்கும் சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் கூறுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த சீசனில் கமல் உடைய சம்பளமும் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.