உலக பசி குறியீட்டு தரவரிசை: 'நாட்டின் மதிப்பை கெடுக்க முயற்சி' – இந்தியா கண்டனம்

உலக பசி குறியீட்டு தரவரிசையை இந்தியா ஏற்க மறுத்துள்ளதோடு, நாட்டின் மதிப்பை கெடுக்கும் தொடர்ச்சியான முயற்சி என குற்றம் சாட்டி உள்ளது.

சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பசி குறியீடு (Global Hunger Index – GHI)  வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான உலக பசி குறியீட்டு பட்டியலில் 6 இடங்கள் சரிந்து,  இந்தியா 107வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. அண்டை நாடுகளான  பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் போன்ற நாடுகளின் நிலைமை நம்மை விட சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.  

image
உலகளாவிய பசி குறியீடு வெளியானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து  வருகின்றன. இந்நிலையில், இந்த தரவரிசையை இந்தியா ஏற்க மறுத்துள்ளதோடு, நாட்டின் மதிப்பை கெடுக்கும் தொடர்ச்சியான முயற்சி என குற்றம் சாட்டி உள்ளது. மேலும், இந்த கணக்கெடுப்பு மிகச்சிறிய அளவில் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இது தவறான தகவல்கள் எனவும் இந்தியா விமர்சித்துள்ளது.

இதையும் படிக்கலாமே: பசியிலிருக்கும் யானை பிளாஸ்டிக் சாப்பிடுகிறது – யார் காரணம்? Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.