அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று திருவள்ளூர், திருவொற்றியூர், பூங்காவனபுரம் பகுதிகளைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் கார்த்திக், ராஜேந்திரன், ஜெய் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது இவர்கள் தலைமையில் திருவொற்றியூர் பெரியகுப்பம், சின்னக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர்குப்பம், எம்ஜிஆர்நகர், ராஜாஜி நகர், பெரியார் நகர், கார்கில் நகர், பாலகிருஷ்ணன் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் ஏ. மூர்த்தி, திருவெற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் மு.குப்பன், சென்னை மாநகராட்சி மன்ற அதிமுக குழு செயலாளர் மு.கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.