மத்திய அரசு பணியில் இருந்து ஐபிஎஸ் விஜயகுமார் ராஜினாமா

சென்னை: மத்திய அரசு பணியை ஐபிஎஸ் விஜயகுமார் ராஜினாமா செய்தார்.

தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார். 1975-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த இவர், பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டார். பின்னர் மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்டு, ராஜீவ் காந்தியின் மெய்க்காவல் படை தலைவரானார். பின்னர் தமிழகம் திரும்பிய அவர், திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளராக பதவிவகித்தார். 1991-ல் ஜெயலலிதா முதல்வரானதும் அவரது மெய்க்காவல் படை தலைவர் ஆனார்.

பிறகு, சென்னை காவல் ஆணையராகவும், பிறகு கமாண்டோ படை தலைவராகவும் நியமிக்கப்பட்ட விஜயகுமார், 2004-ல் வீரப்பனை சுட்டுக் கொன்றார்.

மீண்டும் மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்டு, மத்திய ஆயுதப்படை இயக்குநராக பதவி வகித்து, 2012-ல் ஓய்வு பெற்றார்.

அவருக்கு மத்திய அரசு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கியது. 2018-ல் அப்பணியில் இருந்து ஓய்வுபெற்று, ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக செயல்பட்டார். பின்னர், உள்துறை அமைச்சக மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், அப்பதவியை விஜயகுமார் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணம் என்று கூறியுள்ள அவர், பிரதமர் மோடி, அமித்ஷா, உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.