30 லிட்டர் கலப்பட தேன் கண்டுபிடித்து அழிப்பு: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

ஊட்டி: ஊட்டியில் 30 லிட்டர் கலப்பட தேன் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. ஊட்டியில் உள்ள உணவு பாகாப்புத் துறை சார்பில் பல்வேறு பகுதிளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கலப்படம் செய்யப்பட்டுள்ள உணவு பொருட்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து அழிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் நந்தகுமார் ஆகிேயார் நடுவட்டம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் சாலையோரத்தில் சிலர் பாட்டில்களில் தேன் விற்பனை செய்து வந்ததை பார்த்துள்ளனர்.

அங்கு சென்று அந்த தேன் பாட்டிலை வாங்கி பார்த்த போது, அவை அனைத்தும் கலப்படம் செய்த தேன் எனத் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 30 லிட்டர் தேன் பாட்டில்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.