ரி20 உலக கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வென்றுள்ளது.
இந்தியா, அவுஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று (17) நடைபெற்றது.
இப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி ,முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி தரப்பில் ராகுல் 57 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதையடுத்து 187 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், சஹால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதேவேளை இந்திய அணி 19 ஆம் திகதி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.