ஓடும் ரயிலில் பயங்கரம்… இளைஞரை படியிலிருந்து கீழே தள்ளிவிட்ட சக பயணி..!

மேற்குவங்கத்தில் ஓடும் ரயிலில் இருந்து இளைஞரை, சக பயணி கீழே தள்ளிவிடும் காட்சி இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

ஹவுராவில் இருந்து புறப்பட்ட இன்டர்சிட்டி விரைவு ரயிலில் சாஜல் என்பவர், தனது நண்பர்களுடன் அதிக சத்தத்துடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

அவர்களை அமைதியாக இருக்குமாறு, சக பயணி கூறிய நிலையில், அவருடன் சாஜல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பிர்பும் பகுதியில் ரயில் சென்றபோது, சாஜலை அப்பயணி வெளியே தள்ளிவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.