தமிழகத்தில் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களை சுட்டு கொலை செய்ய வேண்டும் என்று, முன்னாள் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
ஈரோடு : இன்று கோபிசெட்டிபாளையம் தனியார் பள்ளியில் ‘ரைபிள் கிளப்’ தொடக்க விழா நடைபெற்றது. இந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் காவல்துறை டி.ஜி.பி வால்டர் தேவாரம் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தாவது, “தமிழகத்தில் போதை பொருளை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இதனை நிறுத்தினால் மட்டும்தான் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை நம்மால் காப்பாற்ற முடியும். மாணவ-மாணவிகளை குறிவைத்து போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டு கொல்ல வேண்டும்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் பரவி வரும் கஞ்சா போதை கலாச்சாரம் பல்வேறு குற்றங்களுக்கு வித்திட்டு வருகிறது. நேற்று கூட மதுரையில் 5 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரவுடிசத்தில் ஈடுபட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.