இன்று காலை 9 மணி அளவில் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியருக்குரிய ரேங்க் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டர்.
அந்த பட்டியலில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற தேவதர்ஷினி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் 7.5 இட ஒதுக்கீட்டில் 518 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு பள்ளியின் சார்பில் ஆசிரியர்களும் மாணவர்களும் மிகுந்த உற்சாக வரவேற்பு அளித்தனர்.