நைஜீரியாவில் வெள்ளம் பலி 600 ஆக உயர்வு| Dinamalar

அபுஜா, நைஜீரியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கன மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் வசித்தவர்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் உள்ள 36 மாகாணங்களில், 33 மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை இரண்டு லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். 82 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. 3.40 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கியுள்ளது. விளைபொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

நைஜீரியா ஆண்டு தோறும் இதுபோன்ற பெருமழை மற்றும் வெள்ளத்தை சந்திக்கும் என்றாலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஆண்டு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உணவு தானியம் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.