பட்ஜெட் விலையில் மோட்டோ E22s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை and அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் மோட்டோ E22s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதன் பேட்டரி மற்றும் டிஸ்பிளே என அனைத்தும் அசத்தலாக உள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைய காலமாக வரிசையாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு களம் இறக்கி வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனத்தின் E சீரிஸ் வரிசையில் E22s ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்:

  • 6.5 திரை அளவு கொண்டுள்ள இந்த போன் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
  • மீடியாடெக் ஹீலியோ ஜி37 ஆக்டா கோர் பிராசஸர்.
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா. 16 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல்.
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது ஃபிராண்ட் கேமரா.
  • 5000mAh திறன் கொண்ட பெட்டர்.
  • 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்.
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
  • 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்.
  • 4ஜி இணைப்பில் இந்த போன் இயங்கும்.


— Motorola India (@motorolaindia) October 17, 2022

இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. வரும் 22-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த போனின் விலை ரூ.8,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.