சென்னை; சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து, அப்போது துணைமுதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொல்ல மறுத்து விட்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தர்மயுத்தம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெ.மறைந்த உடனே, முதல்வராக அவசரம் அவசரமாக பதவி ஏற்றதுடன், சசிகலாவின் பதவி ஆசையால், தனதுபதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளானார். இதையடுத்து ஜெ.சமாதிக்கு சென்று தர்மயுத்தம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இது அனைவரும் அறிந்ததே.
ஆனால், இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 2012-ல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா, சசிகலா இடையே சுமுக உறவு இல்லை. இதில் சசிகலாவை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும். சசிகலாவை குற்றம் சாற்றுவதை தவிர வேறு வழியே இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின் நடந்தது எல்லாம் ரகசியமாக உள்ளது. இதனால், சசிகலா, கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன், சிவகுமார் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்போலோ வந்திருந்தாலும், ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அஞ்சியோவுக்கு பரிந்துரைத்தும் ஜெயலலிதாவின் கடைசி மூச்சு வரை ஏன் அது நடக்கவில்லை என்பதுடன், ஜெயலலிதா சிகிச்சை குறித்த அனைத்து தகவல்களும், அப்போது துணைமுதல்வராக இருந்த ஓபிஎஸ்-க்கு தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்கள் ஓபிஎஸ்-ம் அறிக்கை தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதனால் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டு எஸ்கேப்பாகி விட்டார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 8பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசாணை – ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்…