புதுச்சேரி அருகே பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பா.ஜ.க பெண் நிர்வாகி உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆரோவில் போலீஸார் குயிலாப்பாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது தெரியவந்தது.
இதையடுத்து அங்குச் சென்று போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பெண்களை வைத்து பாலியல் தொழில் ஈடுபட்ட வளத்தியைச் சேர்ந்த சிதம்பரகனி (27), திருவள்ளூரை சேர்ந்த கார்த்திக் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அதேபோல் நாவற்குளத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசிலும் போலீஸார் ஆய்வு செய்தனர். அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் , புதுச்சேரியை சேர்ந்த வேளாங்கண்ணி ஆகிய இருவரை கைது செய்தனர்.
பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 4 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட வேளாங்கண்ணி என்ற பெண் புதுச்சேரி மாநில பா.ஜ.க நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in