புதுடில்லி, தமிழகத்தைச் சேர்ந்த, ‘ஸ்மார்த்தா’ பிராமணர்கள், தங்களை சிறுபான்மையினராக அறிவிக்க கோரிய மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில், அத்வைத சமய தத்துவத்தை பின்பற்றி வாழும் ஸ்மார்த்தா பிரிவு பிராமணர்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களை சிறுபான்மையினராக அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘ஸ்மார்த்தா பிராமணர்கள் என்ற பெயரில் பொதுவான அமைப்பு எதுவும் இல்லை. தமிழகத்தில் வசிக்கும் இதர பிராமணர்களுடன் இவர்களை வேறுபடுத்தி காட்ட, எந்த தனித்தன்மையும் இல்லை.
‘அவர்கள் தங்களை ஒரு மதப்பிரிவாக கருத முடியாது. எனவே, நம் அரசியலமைப்பின் 26வது பிரிவின் கீழ் பலன்களை பெற அவர்களுக்கு உரிமை இல்லை’ என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ரவீந்திர பட் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘ஸ்மார்த்தா பிராமணர்கள் தனி மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க முடியாது’ என உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement