நவகமுவஇ கொரத்தோட்டையில் நீர் நிரம்பிய கற்குழிக்குள் விளையாடிக்கொண்டிருந்த 14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சிறுவர்கள்இ பீப்பாய்களால் ஆன படகில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது குறித்த படகு கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கிய 02 சிறார்களையும் பிரதேச மக்கள் மீட்டெடுத்து ஒருவல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும்இ சிறுவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இரு சிறுவர்களும் அதுருகிரிய மத்திய வித்தியாலயத்தில் 9 மற்றும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக நீர் நிரம்பி உள்ள பகுதிகளில் சிறார்களை விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்