கவர்ச்சிக்கு சன்னிலியோன் விதித்த நிபந்தனை

கனடாவில் பிறந்தவர் இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த சன்னிலியோன். இவர் ஆபாச படங்களில் நடித்து உலக புகழ்பெற்றவர். ஆனால் அதனைத் தொடராத அவர் அதிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு பாலிவுட்டில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து தமிழிலும் தலை காட்ட ஆரம்பித்தார். அப்படி அவர் ஜெய் நடிப்பில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

தொடர்ந்து, நடிகர் சதீஷுடன் இணைந்து ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் அவர் லீட் ரோலில் நடித்திருக்கிறார். ராணியாக நடித்திருக்கும் சன்னி லியோனுடன் ஜிபி முத்துவும் நடித்துள்ளார். படத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக், ரவி மரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

மேலும், சன்னிலியோன் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கும் தீ இவன் என்ற படத்திலும் கார்த்திக்குடன் சன்னி நடனமாடியிருக்கிறார். இந்தப் படத்தின் கதை, நடிகர்கள், பாடல் வரிகள் மிகவும் பிடித்துள்ளதாக சன்னிலியோன் கூறியதாக தகவல் வெளியானது.

மேலும்  படிக்க | பிக்பாஸ்-6 நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறும் ஜி.பி.முத்து?

இந்நிலையில் சன்னிலியோன் திரைப்படங்களில் கவர்ச்சி நடனமாட நிபந்தனை விதித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், “நான் தொடர்ந்து பல படங்களில் குத்துப்பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமாடி வருகிறேன். என்னை பற்றி யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது.

படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறேன். ஏனென்றால் குத்துப்பாடல் நடனத்தில் நிச்சயம் வயது வந்தோர் காட்சிகள் இருக்கும். அப்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருந்தால் நானே தலையிட்டு படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.