கோவை: நகைப்பட்டறைக்குள் புகுந்து 1 கிலோ தங்கம் அபேஸ்.. CCTV மூலம் அம்பலமான கொள்ளையன்!

தங்க நகை பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சண்முக நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவர் அப்பகுதியில் தங்க நகை பட்டறையில் டை செய்வதற்காக 1067.850 கிராம் தங்கம் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி இரவு கடையில் பணி புரியும் நோவா என்பவரிடம் கடை சாவியை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், நோவாவிடம் இருந்து சாவியை திருடிய கொள்ளையர்கள் தங்கத்தை கொள்ளையடித்து சென்றதாக தகவல் கூறப்படுகின்றது. தங்கம் கொள்ளை போனதை குறித்து தங்கப்பட்டறை நகை உரிமையாளர் மோகன் வெரைட்டியால் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
இக்கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வெரைட்டியால் சாலை காவல்துறையினர் தங்க நகை திருடிய கொள்ளையர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.