சூட்கேசில் இளம் பெண்ணின் நிர்வாண உடல்: விசாரணையில் வெளியானது பகீர் தகவல்..!

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள சவுக் என்ற பகுதியில் கடந்த 17-ம் தேதி கேட்பாரற்ற நிலையில் ஒரு சூட்கேஸ் கிடந்தது. அந்த சூட்கேஸை காவல்துறை கைப்பற்றி திறந்து பார்த்தபோது, நிர்வாண நிலையில் இளம் பெண்ணிண் உடல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தடயங்கள் மற்றும் சிசிடிவி அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆட்டோவில் வந்து சூட்கேஸை சாலையில் வைத்து விட்டு சென்றது தெரிந்தது. ஆட்டோ எண்ணின் அடையாளத்தை வைத்து ஆட்டோ ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அங்குள்ள சிர்ஹவுல் என்ற கிராமத்தில் இருந்த அந்த நபர் சவாரிக்கு வந்ததாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்தார். உடனடியாக சர்ஹவுல் கிராமத்திற்கு சென்று போலீசார் விசாரித்ததில் உண்மை அம்பலமானது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: 22 வயதான ராகுலுக்கும், 20 வயதான பிரியங்காவுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த ராகுல் குருகிராமில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்துவந்தார்.

ராகுலின் சம்பளம் அடிப்படை செலவுகளுக்கே சரியாக உள்ள நிலையில், மனைவி பிரியங்கா கணவரிடம் செல்போன் வேண்டும், டிவி வேண்டும், பிரிட்ஜ் வேண்டும் என நச்சரித்து அடிக்கடி சண்டை போட்டுள்ளார். மேலும், கோபத்தில் பல முறை கணவரை அறைந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு சண்டை முற்றி அடிதடி ஏற்பட்டதில் ராகுல் மனைவி பிரியங்காவை அடித்து கொலை செய்துள்ளார்.

இரவு முழுக்க மனைவியின் பிணத்தை வீட்டில் வைத்து குழந்தையோடு பொழுதை கழித்த ராகுல், அடுத்த நாள் கடைக்கு சென்று பெரிய சூட்கேஸ் வாங்கி வந்துள்ளார். பின்னர், மனைவியின் உடைகளை களைந்து நிர்வாணமாக்கி சூட்கேசில் உடலை வைத்துள்ளார்.

அத்துடன், மனைவியின் கையில் ராகுலின் பெயர் பச்சை குத்தி இருந்ததால், அந்த பகுதியில் சதையை கத்தியால் கிழித்து நீக்கியுள்ளார். பின்னர் ஆட்டோ பிடித்து ஏறி யாரும் இல்லாத இடத்தில் சூட்கேஸை வைத்து விட்டு வந்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட ராகுலை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.