திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை விமானத்தில் வந்தார். ரேணிகுண்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அமைச்சருக்கு ஆந்திர மாநில நிதி அமைச்சர் ராஜேந்திரநாத், இணை கலெக்டர் பாலாஜி, மேயர் சிரிஷா, மாநகராட்சி ஆணையாளர் அனுபமா அஞ்சலி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்ற அமைச்சர், சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அதன்பிறகு இரவு திருப்பதி வந்தார். திருச்சானூர் பதமாவதி தாயார் கோயிலில் இரவு தரிசனம் செய்த அமைச்சர், திருமலைக்கு சென்று தங்கினார். இன்று காலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். இதையடுத்து மதியம் காளஹஸ்தி சென்று சிவன் கோயிலில் தரிசனம் செய்தார். இதையடுத்து ரேணிகுண்டா விமான நிலையம் வரும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.