கொரோனா காலகட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்தினர். இதில் ஐடி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை மேம்படுத்த ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டனர். அத்துடன் ஐடி நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி போட்டி ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கினர். ஏனெனில் கொரோனா கால கட்டத்தில் ஊழியர்கள் எந்த நிறுவனங்களில் அதிக சலுகைகள் கிடைக்கிறது என தேடி அந்த நிறுவனங்களில் பணிபுரிய தொடங்கினர்.
அதனால் ஐடி நிறுவனங்கள் தங்களிடம் ஊழியர்களை தக்க வைத்து கொள்ள இலவசமாக இன்டர்நெட் சேவை, விடுமுறை தினங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கினர். இதையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்த பின்பும் சில நிறுவனங்கள் WFH நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர். சில நிறுவனங்கள் அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து தற்போது விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களிடம் ஊழியர்களை தக்க வைத்து கொள்ள சம்பள உயர்வுகளை அறிவித்துள்ளனர்.
தற்போது இன்போசிஸ் நிறுவனமும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஏராளமான பணியாளர்களுக்கு அவர்களின் திறமையின் அடிப்படையில் 10 முதல் 13% வரை சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும், மேலும் மிகவும் திறமையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 முதல் 25% வரை சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.