பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றிருக்கும் தனலட்சுமி, திடீரென தன்னை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். வீட்டில் அவருக்கும் அசல் கோலாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த மோதலின்போது இருவரும் மாறிமாறி வார்த்தைபோரில் ஈடுபட்டனர். ஒருமையிலும், கேலி கிண்டலுமாக அசல் கோலார் தன்னை வீட்டில் கூப்பிடுவதாக சக போட்டியாளர்களிடம் கூறி, அழ அரம்பித்தார். அசல் கோலாரின் செய்கை தன்னை மிகவும் காயப்படுத்திவிட்டதாகவும் புலம்பினார்.
ஒரு கட்டத்தில் இரவில் தூங்காமல் விழித்துக் கொண்டே இருந்த தனலட்சுமி, நான் ரொம்ப விருப்பப்பட்டுதான் வந்தேன். ஆனால் இப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. நான் வெளியேற போவதே நல்லது என பிக்பாஸிடம் வந்து கேமராவில் கூறினார். இது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் போட்டியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் வெளியேற போகிறேன் என்றெல்லாம் கூறுகிறாரே என நினைத்தனர்.
மீண்டும் கேமராவிடம் வந்த தனலட்சுமி, நான் இங்கு இருந்தேன் என்றால் வார்த்தைகளை அளவில்லாமல் பயன்படுத்திவிடுவேன் என்று கூறினார். சிறிது நேரத்தில் இன்னொரு முறை கேமராவிடம் வந்து, நான் சொன்னதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கோபத்தில் ஏதாவது சொல்லிவிடுவேன். என்னசெய்வது என தெரியாமல் வீட்டை விட்டு அனுப்புங்கனு சொல்லிட்டேன். அப்படி செஞ்சிறாதீங்க. நீங்களாக எப்ப அனுப்புறீங்களோ அப்ப அனுப்புங்க, நான் சொன்னேனு அனுப்பாதீங்க என கேமராவிடம் வந்து மன்றாடி, பிக்பாஸை கூல் செய்தார். அப்பாடா, ஒரு பிரச்சனை ஒழிஞ்சிது என பிக்பாஸ் நினைத்த நேரத்தில் இன்னொரு பிரச்சனை வந்துவிட்டது. இன்று வெளியாகியிருக்கும் புரோமோவில் ஆயிஷாவை அசீம் வாடி போடி என பேசுவது, பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.