பல மாவட்டங்களில் நிர்வாக காரணங்களால் வருவாய் கிராமங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் மறு சீரமைப்பு பற்றி பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள், பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் அடிப்படையில் தற்போது அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் படி, தமிழகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய அளவிலான வருவாய் கிராமங்களானது சிறுசிறு வருவாய் கிராமங்களாலபிரிக்கப்படவுள்ளது.
எனவே, புதிதாக பிரித்து வருவாய் கிராமங்களை உருவாக்க மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமையில் தற்போது 5 பேர் கொண்ட குழுவானது அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்த உத்தரவை வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் பிறப்பித்துள்ளார்.